Saturday, 22 October 2011

இந்நூற்றாண்டின் மகாகவியை பின் தொடர்ந்து...

இக்காலத்தின் மாபெறும் கலைஞரின் வாசகனாய் இருப்பதற்க்கு மிகவும் பெருமை கொள்கிறேன். கலையின் கட்டற்ற கலைகளஞ்சியமாய் திகழும் இவரின் “தப்புத்தாளங்கள்” படிக்கும்போது எனக்கு ஏற்ப்பட்ட ஒரு சிறு யோசனையே இவ்வலைதளம். தப்புத்தாளங்கள் குறித்து நன்பர் அருன் (சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில்) கூறியிருப்பதாவது:
//சாருவின் தப்புத்தாளங்களை கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.இந்தப் புத்தகத்தை என்னால் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை.அவ்வளவு கடினமாக இருக்கிறது எனக்கு.இருந்தாலும் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் படித்துதான் ஆக வேண்டும் என்று என் ஆழ்மனது கட்டளையிடுவதால் படித்துக்கொண்டிருக்கிறேன்.இதற்குக் காரணம் இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரைக்குப் பின்னாலும் தெரிகின்ற சாருவின் பல வருட உழைப்பு.அரேபிய எழுத்தாளர்களையும் இலக்கியங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துவதுடன் மொராக்கோ,தில்லி போன்றவற்றை ஆண்ட மன்னர்களின் வரலாறுகளையும் நமக்கு விரிவாகவும் கதையாகவும் சொல்லிச் செல்கிறார்.இது போன்ற ஒரு புத்தகத்தை எழுத வேண்டுமானால் ஒருவர் தன் வாழ்நாளில் பாதியையாவது இதற்காகச் செலவழித்திருக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது.எளிமையாகச் சொல்லப்போனால் சாரு கஷ்டப்பட்டு, தேடித் தேடி உலக இலக்கியங்களைப் படித்து, அதைப் பற்றி எழுதுகிறார்.நாம் சாருவைப் படிப்பதன் மூலம் கஷ்டமே படாமல் எளிமையாக இவற்றையெல்லாம் அறிந்து கொள்கிறோம்.ஒரு எழுத்தாளர் தன் வாசகர்களுக்காக எவ்வளவு வசதிகளைத் தன் எழுத்தின் மூலம் ஏற்படுத்தித் தருகிறார் பாருங்கள்.இவ்வளவுக்கும் பிறகு, சாருவின் வாசகர்களை விமர்சிக்கும் பேர்வழிகளுக்கு நான் விடுக்கும் கேள்வி இதுதான். இவர் போன்ற எழுத்தாளரைக் கொண்டாடாமல் வேறு யாரைக் கொண்டாடுவது?//

சாருவை எவ்வாறு கொண்டாடுவது? என்று எனக்குள் எழுந்த கேள்விக்கு பதில்தான் இவ்வலைதளம்.

அதற்காக நான் சாருவை அதிகம் கரைத்துக் குடித்தவனெல்லாம் கிடையாது. இவ்வலைதளம் என்னையும் சாருவின் எழுத்தில் ஆழ வேரூன்ற வழி செய்யும் என்ற சுயமான நோக்கத்துடனே இதை ஆரம்பிக்கிறேன்.

இவ்வலைத்தளத்தின் முக்கிய நோக்கங்கள்:

1. சாருவின் புத்தகங்களில் அவர் குறிப்பிட்டுருக்கும் மனிதர்கள், இடங்கள், பாடல்கள் என அனைத்தையும் இங்கே தொகுப்பது.

2. இணையத்தில் சாருவையும், சாருவின் புத்தகங்களையும் குறித்து பேசப்படும் அனைத்தயும் திரட்டி, இங்கே தொகுத்து, அவைப்ப்ற்றி விவாதிப்பது.

3. சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளபடும் சில முக்கிய விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்வது.


இனி அடுத்த பதிவுகளில் சந்திக்கலாம். கருத்துகளை பகிரவும்.

9 comments:

  1. நல்ல முயற்சி :) தொடருங்கள் !!!!!

    ReplyDelete
  2. good attempt... my best wishes...

    ReplyDelete
  3. my best wishes to you.
    I would like to participate with you in this great attempt.

    ReplyDelete
  4. எங்களுக்கும் வாசகர் வட்டத்தில் என்ன நடக்கிறது என்று தெரியும் அல்லவா? மிக நல்ல முயற்சி...

    மாயனின் அகமும் புறமும் http://ahamumpuramum.blogspot.com/

    ReplyDelete
  5. சாருவின் எழுத்தை அவரின் கற்பனைகளின் திறமைகளை வாசகர்கள் மத்தியில் பரவ செய்யும் நல்ல முயற்சி.....டிசம்பர் 6 நம்ப ஆசானோட எக்ஸைல் ரிலீஸ் ஆகுது அதுக்கு அப்பறம் அவர் பெயரை உச்சரிப்பதே அவமானம் என்றவர்கள் தினம் தினம் அவமானத்தை எதிர் கொள்ள போவது உறுதி....

    ReplyDelete