Monday 24 October 2011

வாசகர் வட்ட சந்திப்பு சீஸன் -3

இடம் : மகாபலிபுரம்
தேதி : 15-16/10/2011


வாசகர் வட்ட சந்திப்பு பற்றி வட்டத்து நன்பர்கள்:


நன்பர் அராத்து:


வாசகர் வட்ட சந்திப்பு - சின்ன சின்ன விஷயங்கள்.

சாருவுடன் 2 ஆள் உயரத்திற்கு வந்த அலைகளோடு குளித்தோம்.

சாருவை காப்பாற்றுவதற்றுவதாக நினைத்து சாருவின் மூக்கை உடைத்தார் செல்வம் .

சாரு - சிவம் இருவரை வைத்து பார்த்திபன் உருவாக்கிய கிசுகிசுக்கு வலு சேர்த்தார் செல்வம்.

பெல் சிவா கடலில் பாறை மேல் ஏஏஏஏறி காலை கிழித்துக்கொண்டார்.

lays , kurkure யாரும் வாங்கி வரவில்லை.

தமிழ்ச்சூழலில் வளர்ந்த நான் என ஆரம்பித்து எல்லோர் வயிற்றிலும் புளியை கரைத்தார் பாஸ்கர்.

வாசகர் வட்ட பொது நிதியிலிருந்து வரவழைக்கப்பட்ட 6 தோசை & 6 சப்பாத்தி காலியானது.

மாலை 6 மணிக்கு லஞ்ச் முடிந்தது.

பீச்சில் 2 நிமிடம் நிர்வாணமாக இருந்த ஓல்ட் மாங்கை யாரும் போட்டோ எடுக்கவில்லை.

பழைய சாருவா புது சாருவா என 2 பிரிவாக பிரிந்து விவாதம் செய்கையில் 2 தரப்பினரும் ஒரே தரப்பையே பேசினர்.

சாரு இசையை பற்றி பேசுகையில் மட்டும் - மாற்றுக்கருத்தே இல்லை.

அடுத்த நாவலை எழுத ஆரம்பித்து விட்டதாக அறிவித்தார்.

டிசம்பர் 6 தேதி விழாவிற்கு வேலை செய்கிறோம் பேர்விழி என்று டிசம்பர் 4 ம் தேதியிலிருந்தே காமராஜர் அரங்கத்திற்கு அருகில் ரூம் போட்டு குடிக்கலாம் என 5 பேர் முடிவெடுத்து உள்ளனர்.



நன்பர் ப்ரியமுடன் துரோகி(உண்மையில் நல்ல நன்பர்):


வாசக வட்டம் சீஸன் 3

சூப்பர் ஸ்டார் ஸ்பீட்ல சீனீ எண்ட்ரீ குடுத்தார்.. வந்ததும் ஸேலட் ப்ரிபரேஸன தொடங்கிட்டார்.. வாய் கொஞ்ச நேரம் சும்மா இருக்கறதில்ல.. திடீர் திடீர்னு புது டாபிக் தொடங்கிடரார்.. ஆனால் ஏனோ மீட்டிங்க்கு ஷர்ட் கொண்டு வர மறந்துட்டார்னு போல. மனுஷன் பனியன் தான் 2 நாளும்.

பாஸ்கர் இந்த முறை மெளன விரதம் இருந்துடாரோ என்று நினைக்கும் அளவுக்கு பயங்கர அமைதி..

பார்த்திபன் .. அடடா என்ன ஒரு கம்பீரம் மனுஷனுக்கு.. அந்த வேஷ்டி சட்டையில்.. ரொம்ப ப்ரெண்ட்லி பேர்வழி.. கேப்டன் ஆப் தி ஷிப். நான் குடிக்ககூடாதுனு சொல்லியே நாலு ரவுண்ட் உள்ள தள்ளிட்டார்..

செல்வமாணிக்கம் பிரச்சனையால தான் காது குடைவாரோனு நினைக்கிற அளவுக்கு பிண்றாரு. (உ.ம் டிபன் மேட்டர்..)

சிவசுப்பிரமணியன் மேன் வித் தி இன்ஃபெர்மேஷன்.. அறிமுக படலத்தில் சிறந்த பேச்சு. இவர் பேசுவதை குறிப்பு யாரேனும் எடுக்கிறீர்களா என்று சாருவை எண்ண வைத்தவர்.. அப்பறம் கடல் குளியலில் பறையில் ஏறுகிறேன் பேர்வழினு முக்கி கிட்டுருந்தாரு..

ஏனோ அப்துல்,ராம்,அனிஸ் கேள்வி நேரத்தில் தியானத்தில் இருந்தார்கள்.

ராஜேந்திரன் பன்மொழி வித்தகர்.. ரொம்ப சாஃப்ட்.. அதிகம் பேச மாட்டேங்கறார்.. சாருகிட்ட மட்டும் தான் பேசுவேனு அடம் பிடிக்கிறார்.

இந்த முறை சரக்கடித்து யாரும் மட்டையாகவில்லை.. அடியேன் மட்டும் சரக்கடித்தபின் திவிர தியானத்தில் ஈடுபட்டேன்...

சந்திப்பின் ஹைலைட்: அதுவும் ஷர்ஃப் செய்ய வந்த பெண்ணை அடிச்சாரு பாருங்க ஒரு ஷைட்.. ஷேலட் பிரிஃபரேஷனுல் தீவிர ஈடுபாடு.. Xenakis - Psappha ட்ரம்ஸ் ஒலிக்கும் போது யாரும் அதில் ஈடுபாடு காட்டவில்லை என்பதில் வருத்தபட்டார்..

பிரபு ஷைடல் பேர்வழி .. அதிவும் ரிபாக் ஸ்பெக்ஸ்ல ஹீரோ மாதிரி இருந்தார்.. ஆனா ரொம்ப நேரம் போனும் கையுமாக தான் இருந்தார் விவாத நேரத்திலும் போனையே வெரிச்சி பாத்துகிட்டு இருந்தார்..

அருமையான ஹோட்டல்.. மெனு கார்டை பார்த்ததும் பசி போயிடுச்சி. டூ காஸ்ட்லீ.. அப்படியும் ஆர்டர் பண்ணது ஷர்வ் பண்ணாமையே பணத்த புடிங்கிட்டாங்க..

ரிட்டர்னில் பார்த்திபனுன் காரில் உல்லாச ஏசி பயணம்.. அவருடைய வெற்றி சரித்திரத்தை சொல்லிக்கொண்டே வந்தார்.. பெண்களை பற்றி பேசும்போது எண்ணமா குதூகலமாயிடரார் மனுஷன்.. மன்மதன்னு கூட பேர மாத்திக்கலாம்.

டிசம்பர்-6 விழா கொண்டாட்டதை பற்றிய விவாதம், நண்கொடை போன்றவை பயனுள்ளதாக அமைந்தது இந்த சந்திப்பில்..

மேலும் பல நண்பர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தோம்.. சாருவும் வருத்தபட்டார். சென்ற முறை வந்தவர்கள் கூட ஏன் வரவில்லையென்று..

சென்ற விவாதத்தில் கூறிய உறுதிமொழியை யாரும் அதன் பின் தொடரவில்லை என்பதை சாரு குறிப்பிட்டுள்ளார்..



நன்பர் ராஜா ராஜெந்திரன்:


சீசன் - 3 மகாபலிபுரச் சந்திப்பு :- கலவரம்கொன்றான் !

நடந்தது என்ன ? தன்னுடைய சமயோசித அறிவின் மூலம் நிகழவிருந்த ஒரு பெரிய கலவரத்தை Mr.SELVAM MANICKAM தடுத்தார் ! அண்ணன் தலைமையில் காலை உணவருந்த எண்மர் குழுவாய் போனோம் ! தட்டிருந்தால் மட்டுமே உணவு என்ற ' BASIC PRINCIPAL' கொண்ட சாலையோர உணவகம் அது ! எங்களை கண்டதும், சாப்பிட்டுக் கொண்டிருந்த கும்பல், மேலும் மேலும், ஆர்டராகச் சொல்லி, சிங்கத்தை சுரண்டி விளையாண்டது ! ஒரு வழியாய் ஏழு பேருக்கு தட்டு கிடைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வந்தது ஒர் அரசியல் பிரச்சாரக் கோஷ்டி.....நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ஒரு உடன்பிறப்பு, சாப்பிட்டு முடித்த எங்களில் ஒருவரின் தட்டைப் பறிக்க பாய்ந்து வந்தது, ஏற்கனவே எங்களுக்கே ஒரு தட்டு குறைவா.....கேட்க வேண்டுமா செல்லத்த, 'அடங்க மாட்டீங்களா ?' என்று சீறிப் பாய்ந்தார் ! பாஸ்கர் உட்பட எல்லாருக்கும் ஒரு கணம் ரத்தம் உறைந்தது ! உடன் பிறப்பு பரிதாபமாய் செல்லத்தைப் பார்த்து கேட்டது 'நாங்க அடங்குனுமா ?' அப்போதுதான் செல்வம் 'MIND VOICE' நான் படித்தேன் 'அதான், சட்டசப எலக்சன்லையே அடங்கிட்டீகளே !' சரி அதுக்கப்புறம் என்னாச்சு ? 'உங்கள சொல்லங்க, எங்காள சொன்னேன்' ன்னு, செல்வம் சொன்ன அந்த வடிவேலு டச், நினைத்துப் பாருங்கள் தோழர்களே, அன்று இந்த சிங்கம் பின் வாங்காமல், முன்னே சென்றிருந்தால்........எனவே எங்களை வாழ வைத்த அண்ணன் வாழ்க !



சாரு வாசகர் வட்டச் சந்திப்பு 3 # மாமல்லபுரம்

ஏற்கனவே நிறைய ARATHU எழுதிவிட்டாலும் என் பங்கிற்கு :-

1) ' நாவல் உலக வரலாற்றில் முதன்முறையாக' என பலச் சிறப்புகளை 'EXILE ' பெறப்போவதாக சாரு அறிவித்தார் !

௨) அதில் வரும் சில சுவைமிக்க காதல் பகுதிகளை, காதல் ரசம் ததும்ப வர்ணித்தார் ! (ஐ....நாங்க ட்ரைலர் கேட்டுட்டமே)

௩) இனி, கால்தூசுக்கு பெறாத அல்லக்கைகளை எல்லாம் திட்டி எழுதி, நேரத்தை வீணக்கப்போவதில்லை என்றார் !

4) தான் 'நோபல்' பரிசை நோக்கி தடம் பதித்துச் செல்லப்போவதாக சொன்னார் ! (ADVANCE WISHES CHARU)

௫) அடுத்த நாவலையும் தொடங்கியாச்சு, அதுல ஒரு சல்சா கோச் கதை வரப்போகுது ! (முழுக் கதையை சொல்லிட்டாரு, 'பாஸ்கர்' எவ்வளவு தடுக்க முயன்றும், ம்ஹூம்)

௬) இப்பதான் உச்சகட்டம் ! இசை விவாதம்.....ரிப்பீட்டாகவே இருப்பதால், ஆஸ்கர் வின்னர் இவரிடம் அப்பீட்டானார் ! நீஈஈஈஈஈண்டுக் கொண்டே போன விவாதத்தை, எவ்வகையிலாவது தடுத்து நிறுத்த, ARATHU முயன்றும் தோல்வியே அவரைத் தழுவ, SELVAM MANICKAM ஆபத்த பாந்தவனாய் எழுந்தருளி முடித்து வைத்தார் !

௭) நள்ளிரவு ஒரு மணிக்கும் மேல், எழிலாய் வடிவமைத்த கொசுவலை மூடிய கட்டிலில், A/C போட்டுக் கொண்டு காலை எட்டுவரை ஆழ்ந்த தூக்கம் ! வாவ்வ்வ்......நன்றி, Mr.PARTHIPAN, BASKAR, SRINIVASAN............GOOD NIGHT !

Sunday 23 October 2011

Define சாரு?

சில வாரங்களுக்கு முன் சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் நன்பர் குருசாமி கனபதி கேட்ட கேள்வி Define சாரு? 


அதற்கு கிடைத்த பதில்களில் சிலவற்றை இங்கே கொடுக்கிறேன்.



                                     படம்: பிரபு ராமகிருஷ்னன்.

Baskar Raja define GOD?????

Baskar Raja he is CHARU...just CHARU... thats it..

Baskar Raja CHARU=GOD - for me

Raghu Ram Charu = God.. Amazing baskar na...

Raghu Ram I think Charu + God = God...
Raghu Ram Clear definition...? Can you please get me a clear definition of LIFE....?
Define life..?

Raghu Ram
I asked that, becos Charu is mixed in my life..
I'm not complete without his writings, i can't see him just as a writer, beyond everything in my life..
So, if you can find answer for life, you need to go beyond that to get the answer for Charu..

Raghu Ram
சாருவின் எழுதும் நானும் கலந்ததுதான் இந்த உடல்...

Raghu Ram
தண்ணீரை define பண்ண முடியுமா ...?
காற்றை, கடலை, அதே போல் சாருவை ..?

Selvam Manickam me = charu

Deepan Chakkravarthi .
C - Charming Psychic
H - Holy minded
A - Attractive Writer
R - Romantic guy
U - Unbelievable Mindset
Prabhu Ramakrishnan ஆசான்

Manivannan Periasamy u could have come back with Charu = 0 signifies his magnum opus "0 Degree" novel (I was hoping for that)!
BTW, mathematically, everything cannot be proved! Still a lot left to be proven!!

Raghu Ram Brother not that.. Zero is the starting of everything in this world..
மூலதனம் Like that charu's writings are the starting point of my life.. 
His writings are the soul of this body... Yeah I agree for that and apologies..

பிரியமுடன் துரோகி உண்மையானவர்.. .. ஜஸ்ட் ட்ரூ மேன்..

Ashok Deva Rajan
சாரு = ordinary

Dhayanithy Malayalam charu = oru kalakakkaarar

Hari Prasad charu = True love & care

Pradeep Selvaraj
சரவெடி-------சாரு!

Rajamohan Raja CHARU- ORIGINAL KALAIGNAN.....

Prabhu Kalidas First thing
இது சின்ன கேள்வி இல்ல. Second thing, Define சாரு? = Define Universe?. தலைவர் எல்லை இல்லாதவர்.

Anbu Anand
சாரு = முடிவல்ல, தொடக்கம் (அனைத்துக்கும் )

Sugumar Ramadoss define human...

Saturday 22 October 2011

இந்நூற்றாண்டின் மகாகவியை பின் தொடர்ந்து...

இக்காலத்தின் மாபெறும் கலைஞரின் வாசகனாய் இருப்பதற்க்கு மிகவும் பெருமை கொள்கிறேன். கலையின் கட்டற்ற கலைகளஞ்சியமாய் திகழும் இவரின் “தப்புத்தாளங்கள்” படிக்கும்போது எனக்கு ஏற்ப்பட்ட ஒரு சிறு யோசனையே இவ்வலைதளம். தப்புத்தாளங்கள் குறித்து நன்பர் அருன் (சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில்) கூறியிருப்பதாவது:
//சாருவின் தப்புத்தாளங்களை கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.இந்தப் புத்தகத்தை என்னால் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை.அவ்வளவு கடினமாக இருக்கிறது எனக்கு.இருந்தாலும் கண்டிப்பாக இந்தப் புத்தகத்தைப் படித்துதான் ஆக வேண்டும் என்று என் ஆழ்மனது கட்டளையிடுவதால் படித்துக்கொண்டிருக்கிறேன்.இதற்குக் காரணம் இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரைக்குப் பின்னாலும் தெரிகின்ற சாருவின் பல வருட உழைப்பு.அரேபிய எழுத்தாளர்களையும் இலக்கியங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துவதுடன் மொராக்கோ,தில்லி போன்றவற்றை ஆண்ட மன்னர்களின் வரலாறுகளையும் நமக்கு விரிவாகவும் கதையாகவும் சொல்லிச் செல்கிறார்.இது போன்ற ஒரு புத்தகத்தை எழுத வேண்டுமானால் ஒருவர் தன் வாழ்நாளில் பாதியையாவது இதற்காகச் செலவழித்திருக்க வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகிறது.எளிமையாகச் சொல்லப்போனால் சாரு கஷ்டப்பட்டு, தேடித் தேடி உலக இலக்கியங்களைப் படித்து, அதைப் பற்றி எழுதுகிறார்.நாம் சாருவைப் படிப்பதன் மூலம் கஷ்டமே படாமல் எளிமையாக இவற்றையெல்லாம் அறிந்து கொள்கிறோம்.ஒரு எழுத்தாளர் தன் வாசகர்களுக்காக எவ்வளவு வசதிகளைத் தன் எழுத்தின் மூலம் ஏற்படுத்தித் தருகிறார் பாருங்கள்.இவ்வளவுக்கும் பிறகு, சாருவின் வாசகர்களை விமர்சிக்கும் பேர்வழிகளுக்கு நான் விடுக்கும் கேள்வி இதுதான். இவர் போன்ற எழுத்தாளரைக் கொண்டாடாமல் வேறு யாரைக் கொண்டாடுவது?//

சாருவை எவ்வாறு கொண்டாடுவது? என்று எனக்குள் எழுந்த கேள்விக்கு பதில்தான் இவ்வலைதளம்.

அதற்காக நான் சாருவை அதிகம் கரைத்துக் குடித்தவனெல்லாம் கிடையாது. இவ்வலைதளம் என்னையும் சாருவின் எழுத்தில் ஆழ வேரூன்ற வழி செய்யும் என்ற சுயமான நோக்கத்துடனே இதை ஆரம்பிக்கிறேன்.

இவ்வலைத்தளத்தின் முக்கிய நோக்கங்கள்:

1. சாருவின் புத்தகங்களில் அவர் குறிப்பிட்டுருக்கும் மனிதர்கள், இடங்கள், பாடல்கள் என அனைத்தையும் இங்கே தொகுப்பது.

2. இணையத்தில் சாருவையும், சாருவின் புத்தகங்களையும் குறித்து பேசப்படும் அனைத்தயும் திரட்டி, இங்கே தொகுத்து, அவைப்ப்ற்றி விவாதிப்பது.

3. சாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளபடும் சில முக்கிய விடயங்களை இங்கே பகிர்ந்து கொள்வது.


இனி அடுத்த பதிவுகளில் சந்திக்கலாம். கருத்துகளை பகிரவும்.